Home /News /tamil-nadu /

''அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் தண்டனை அல்ல, பரிசு'' - ஜெயக்குமார்

''அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் தண்டனை அல்ல, பரிசு'' - ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயகுமார்

அமைச்சர் ஜெயகுமார்

தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது தண்டனை அல்ல பரிசு என தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயர் சொல்லி அவதூறாக பேசியதாக தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது சர்ச்சை எழுந்த நிலையில் அவரது இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இது தண்டனை அல்ல பரிசு என கூறியுள்ளார்.

கள்ளஓட்டு போட முயன்ற நபரை பிடித்து கொடுத்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இரண்டாவது நாளாக ராயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.  பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து எதிர்கட்சிகளை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குறிப்பாக அதிமுகவை முடக்க வேண்டும் என பொய் வழக்குகள் போட்டு வருகின்றனர்.

ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் வகையில் பொய் வழக்கு போடும் முதல்வர் சர்வாதிகாரிகள் எல்லாம் வராலாற்றில் எப்படி வீழ்ந்தார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்,அதற்கு ஒரு புத்தகம் கூட தயார் என தெரிவித்தார். பொய் வழக்கு போட்ட பின் சட்ட போராட்டம் நடத்தி நீதிமன்றம் வழங்கி உத்தரவின் அடிப்படையில் கையெழுத்திட்டு வருகின்றேன், பேசினால் சிறை என்பது சர்வாதிகர நாட்டில் தான் நடக்கும். ஆகையால் இது குறித்து குடியரசு தலைவர், மனித உரிமை ஆணையம் என அனைத்து இடங்களிலும் புகார் மனு அளித்துள்ளோம். அதற்கான பதிலை திமுக அரசு சொல்ல வேண்டும்.

ALSO READ |  டிரெய்லர்க்கே திமுக அரண்டு விட்டது, இன்னும் முழு படத்தை காண்பித்தாால் அவ்வளவு தான் - கடம்பூர் ராஜூ விமர்சனம்

அமைச்சர் ராஜகண்ணப்பனை நீக்கமால் வேறு இலாகா மாற்றம் செய்திருப்பது அவருக்கு கிடைத்த பரிசு தான் தண்டனை அல்ல, பெயருக்கு வெளியே திராவிட மாடல் என சொல்வது, வெளிநாடு முதலீடுகள் எல்லாம் எதற்கு என்பது நினைத்தால் மாலு மாலு சுரங்கனிக்காக மாலு என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது, வெளிநாடு பயணத்தில் திமுகவின் குடும்ப ஆடிட்டர் ஏன் சென்றார் என்பதற்கு மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: ADMK, Jayakumar

அடுத்த செய்தி