Home /News /tamil-nadu /

வெல்லம் உருகுதய்யா.. விடியல் ஆட்சியிலே - ட்ரெண்டாகும் ஜெயக்குமாரின் வீடியோ

வெல்லம் உருகுதய்யா.. விடியல் ஆட்சியிலே - ட்ரெண்டாகும் ஜெயக்குமாரின் வீடியோ

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

திமுக அரசின் பொங்கல் தொகுப்பை விமர்சித்து ஜெயக்குமார் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருள்கள் வைத்து கடந்த சில நாள்களாக இணையத்தில் மீம்ஸ்கள் வட்டமடிக்கின்றன. அதிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள வெல்லம் உருகுதய்யா.. வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பாக வழங்கப்படுகிறது. பச்சை அரிசி, வெல்லம் , முந்திரி , உலர் திராட்சை , ஏலக்காய் , பாசிப்பருப்பு , ஆவின் நெய் , மஞ்சள்தூள் , மிளகாய்த்தூள், மல்லித்தூள் , கடுகு , சீரகம் , மிளகு , புளி , கடலைப்பருப்பு , உளுந்தம் பருப்பு , ரவை , கோதுமை மாவு , உப்பு , துணிப்பை , முழு கரும்பு என 21 பொருள்கள் வழங்கப்படுகின்றன. இந்த அறிவிப்பு வெளியானதும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    பொருள்கள் விநியோகம் செய்யத் தொடங்கியதில் இருந்தே விமர்சனங்கள் எழத் தொடங்கியது. பல இடங்களில் 21 பொருள்கள் முழுமையாக வழங்கவில்லை. 15, 16 பொருள்கள் தான் வழங்குவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். ரேஷன் கடைகளில் விசாரித்தால் நாங்க என்ன வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றோம் வந்ததைதான் தர்றோம் என்கின்றனர்.பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் பொருள்கள் சில இடங்களில் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில இடங்களில் அதிகாரிகள் தரமற்ற பொருள்களை நிறுத்தி வைத்தனர்.

    Also Read: பொங்கல் தொகுப்பில் பல்லி.. தட்டிக்கேட்டவர் மீது வழக்கு - மனவருத்தத்தில் தீக்குளித்த மகன் இறப்பு

    பொங்கல் தொகுப்பில் வெல்லம் பாக்கெட் செய்து தருகின்றனர். பிளாஸ்டிக் கவரில் வெல்லம் உருகுகிறது. திருத்தணியில் பயனாளி ஒருவர் வாங்கிச்சென்ற புளியில் பல்லி இறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்து புகார் தெரிவித்தார். அவர் மீதே வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மகன் தீக்குளித்து உயிரிழந்தது வேதனையின் உச்சக்கட்டம்.

    துணிப்பை அரசு தரும் எனும் நம்பி செல்லும் பயனாளிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. துணிப்பை தட்டுப்பாடு இருக்கிறது வீட்டில் இருந்து கொண்டு வாருங்கள் எனத் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இவையெல்லாம் செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் செய்தியாக வந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என டோல்ஃப்ரி எண் அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டது. இருந்தும் என்ன பயன் திடீரென ரேஷன் கடைகளை மூடும் சம்பங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

     



    தி.மு.க அரசின் பொங்கல் தொகுப்பை விமர்சித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டரில் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சிங்கக் குரலோன் டி.எம்.செளந்தர்ராஜன் பாடிய உள்ள உருகுதய்யா – முருகா என்ற பாடலை.. பொங்கல் தொகுப்பில் உருகும் வெள்ளத்துடன் ஒப்பிட்டு வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், வெல்லம் உருகுதய்யா முருகா விடியல் ஆட்சியிலே.. பல்லி புதைத்திடவே.. பல்லி புதைத்திடவே அவர்க்கு புளிதான் கிடைத்ததப்பா..” என விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, DMK, Jayakumar, Pongal, Pongal Gift, Twitter, Viral Video

    அடுத்த செய்தி