தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதந்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,
சென்னை மாநகராட்சி 151வது வார்டில் இளம் வேட்பாளரான லோகேஷ் என்பவர்
அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக அவர் தமது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருக்கு ராகினி என்பவருடன் திருமணம் செய்ய பெற்றோர்களால் பேசி முடித்து சில மாதங்களுக்கு முன்பே நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவரது திருமணம் சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணையும் உடன் அழைத்து கொண்டு திருமணக் கோலத்தில் அவர் தனது வார்டுக்குட்பட்ட ராமாபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மணக்கோலத்தில் வந்து அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் பொதுமக்களுக்க டீ போட்டுக்கொடுத்தும், பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்தும் மணப்பெண்ணுடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Must Read : உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.. ஏன் தெரியுமா? - எடப்பாடி பழனிசாமி
மேலும் இவரது வித்தியாசமான வாக்கு சேகரிப்பு உத்தியை பார்த்து அப்பகுதி மக்கள் ரசித்தனர். இந்நிலையில், வேட்பாளர் லோகேஸ் அளித்த பேட்டியில், வார்டில் உள்ள அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து தரப்படும் எனவும், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி போன்றவை செய்து தரப்படும் எனவும், மக்கள் பணியே தனது முதல் பணி எனவும் தெரிவித்தார்.
செய்தியாளர் : சோமசுந்தரம்.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.