Home /News /tamil-nadu /

தனது ஆடைகளை திருடியதாக இளைஞர் தனுஷ் மீது நடிகை நிக்கி கல்ராணி போலீசில் புகார்

தனது ஆடைகளை திருடியதாக இளைஞர் தனுஷ் மீது நடிகை நிக்கி கல்ராணி போலீசில் புகார்

நடிகை நிக்கி கல்ராணி

நடிகை நிக்கி கல்ராணி

Nikki Galrani : கேமரா மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் ஆடைகளை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்ட தனுஷை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டார்லிங் என்ற படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி நடிகர் மற்றும் இயக்குநருமான சசிகுமார் உடன் ராஜவம்சம் என்ற படத்தில் கடைசியாக நடித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு குடியிருப்பில் தங்கி வரும் நடிகை நிக்கி கல்ராணி, அண்ணாசாலை காவல்நிலையத்தில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில் தான் ராயப்பேட்டை தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாகவும், வீட்டில் வேலை பார்ப்பதற்காக தனியார் ஏஜென்சி மூலம் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த தனுஷ்(19) என்பவரை சில மாதங்களுக்கு முன் நியமித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தனது வீட்டில் வேலை பார்த்து வந்த தனுஷ் தனது வீட்டிலிருந்து சில பொருட்களை திருடி சென்றுவிட்டார் எனவும் குறிப்பாக  தனது ஆடைகள் மற்றும் தான் பயன்படுத்தி வந்த கேமரா ஆகியவற்றை திருடி சென்றுவிட்டதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அதே அண்ணாசாலை காவல் நிலையத்தில் நிக்கி கல்ராணி மீது விசிக  பிரமுகர் செல்லதுரை என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் வேலை பார்க்கும் தனுஷ் என்பவரை பொருட்களை திருடியதற்காக சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளார் என்றும், தனுஷின் பெற்றோர்கள் தன்னிடம் உதவி கேட்டு உள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து கடந்த 13-ஆம் தேதி தனுஷின் தாய் நாகவல்லி மற்றும் தந்தை இருவரும் விருதாச்சலத்தில் இருந்து சென்னை வந்து தன் மகனை காணவில்லை என்ற புகாரை அண்ணாசாலை காவல்நிலையத்தில் அளித்தனர்.

இதனையடுத்து அண்ணாசாலை போலீசார் நிக்கிகல்ராணி வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தனுஷ் பொருட்களைத் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தனுஷ் திருப்பூரில் உள்ள அவரது நண்வர் வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருப்பூரில் மறைந்திருந்த தனுஷை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் விலை உயர்ந்த கேமராவை நடிகை நிக்கி கல்ராணி வீட்டிலிருந்து திருடியதாகவும்  கோயம்புத்தூரில் ஒரு கடையில் அதனை விற்பனை செய்துவிட்டு திருப்பூரில் உள்ள நண்பர் வீட்டில் தங்கி இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Also Read: குழந்தை எனக்கு பிறக்கவில்லை.. கைவிரித்த காதலனால் பெண் தற்கொலை - செல்போனில் சிக்கிய ஆதாரங்கள்

இதனைத் தொடர்ந்து கேமரா மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் ஆடைகளை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்ட தனுஷை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை நிக்கிகல்ராணி தனுஷ் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Actress, Camera, Crime | குற்றச் செய்திகள், Dresses, Nikki Galrani

அடுத்த செய்தி