Home /News /tamil-nadu /

உயிரோடு இருந்திருந்தால் கருணாநிதி பாதத்தை தொட்டு வணங்குவேன் - நடிகர் சிவக்குமார் உருக்கம்

உயிரோடு இருந்திருந்தால் கருணாநிதி பாதத்தை தொட்டு வணங்குவேன் - நடிகர் சிவக்குமார் உருக்கம்

ஐ லியோனி, நடிகர் சிவக்குமார், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ்,

ஐ லியோனி, நடிகர் சிவக்குமார், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ்,

Actor Sivakumar | சிவக்குமார் எழுதிய "திருக்குறள்-50" என்ற நூலினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெற்றுக்கொண்டார்.

  • News18
  • Last Updated :
வள்ளுவர் கோட்டத்தையும், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும் நிறுவிய கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் அவரின் பாதத்தை தொட்டு வணங்குவேன் என நடிகர் சிவகுமார் உருக்கத்தோடு தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் இணையக் கல்விக் கழகம், தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் நடைபெறும் விழாவில்  தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ லியோனி, நடிகர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தீராக்காதல் திருக்குறள் திட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வரைந்த ஓவியக் கண்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்ட ஓவியப்போட்டியில் 365 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டது.

பின்னர், நடிகர்  சிவக்குமார் எழுதிய "திருக்குறள்-50" என்ற நூலினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையை அமைச்சர்கள் வழங்கினர். விழா மேடையில் நடிகர் சிவகுமார் பேசுகையில், கலைஞர் உயிரோடு இருந்தால் ஆவரின் பாதத்தை தொட்டு வணங்குவேன். அவர் தான் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தையும், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலையும் வைத்தவர் என்றார்.

Also read... மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றினால் ரூ. 25,000 வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

மேலும், புறநானூற்று தாய் பற்றி கலைஞர் எழுதிய வசனத்தை முழுமையாக பேசி காட்டினார். அப்போது புறநானூற்றின் ஓரிரு வார்த்தைகளில்  சிவக்குமார் தடுமாற, அருகில் இருந்த அமைச்சர் தங்கம் தென்னரசு அதனை நினைவூட்டினார். இந்த சுவாரஸ்ய நிகழ்வு பார்வையாளர்களை கவர்ந்தது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Sivakumar, DMK Karunanidhi

அடுத்த செய்தி