ஆக்டிவா இருசக்கர வாகனத்தை மட்டும் குறிவைத்து திருடும் கொள்ளையன், தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னை தாம்பரம் ரங்கநாதபுரம் 2,வது தெருவில் வசித்து வருபவர் கிஷோர் (வயது32). இவர் தாம்பரத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்.வழக்கம்போல் வேலை முடித்து இரவு வீட்டுக்கு வந்த கிஷோர் வீட்டு வாசலில் தனது ஆக்டிவா இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிஷோர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் நள்ளிரவில் ஒருவர் நடந்து வந்து அக்கம்பக்கம் நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. உடனே சிசிடிவி காட்சிகளுடன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை தேடி வருகின்றனர். தாம்பரம் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடுப்போவதால் கொள்ளையர்களை விரைவில் பிடிக்கும்படி போலீஸாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர்: சுரேஷ்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.