Home /News /tamil-nadu /

Yoga Asanas | யோகாசனத்தில் சென்னை மாணவிகள் உலக சாதனை

Yoga Asanas | யோகாசனத்தில் சென்னை மாணவிகள் உலக சாதனை

யோகா

யோகா

8 பேரும் தொடர்ந்து ஒரே வகையான யோகாசனத்தை ஆடாமல் ஆசையாமல் ஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் தொடர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தனர்.

முடிச்சூரில் 8 மாணவ, மாணவியர் ஒரு மணிநேரமாக தொடர்ந்து ஒரே வகையில் யோகாசனத்தில் அமர்ந்து உலக சாதனை படைத்துள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் சாய் யோகா அகடாமி சார்பில் தங்கள் மையத்தில் யோக பயின்று வரும் மாணவ, மாணவியர்களை சாதனையாளர்களாக மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி லக்‌ஷயா, லக்சித், நிஷிதா, சாய்நிகிலன், இந்திரேஷ், வர்ஷினி, மோனிஷ், ஜெய் ஆதர்ஷ் ஆகிய 8 மாணவ மாணவியர்கள் 8 விதமான யோகாசனம் செய்தனர்.



மேலும் 8 பேரும் தொடர்ந்து ஒரே வகையான யோகாசனத்தை ஆடாமல் ஆசையாமல் ஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் தொடர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தனர். இதனை உலகசாதனையாக நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்தது. அதனை தொடர்ந்து சாதனை படைத்த 8 மாணவர்க்ளுக்கு உலக சாதனை விருதினை முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சிந்துலேகா, துணை தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் வழங்கினர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Chennai, Yoga

அடுத்த செய்தி