சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்தராக்ஸ் நோயால் மான்கள் உயிரிழக்கவில்லை என தமிழ்நாடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
200 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்திருக்கும் ஐஐடி வளாகம் வனப்பகுதியில் அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான மான்களின் வசிப்பிடமாக சென்னை ஐஐடி இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மான் ஒன்று உயிரிழந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இறந்த மானை ஆய்வுக்கு உட்படுத்தியதில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிழந்திருப்பதாக சென்னை ஐ ஐ டி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மான் ஆந்தராக்ஸ் நோயால் உயிரிழந்தது குறித்துஆய்வு செய்ய தமிழக அரசு இறந்த மானில் இருந்து மாதிரிகளை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் மான் ஆந்தராக்ஸ் நோயால் இறக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நாயில் இருந்து மானிற்கு ஆந்த்ராக்ஸ் நோய் பரவியதாக நேற்று ஐஐடி நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.