சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் போது இரண்டு குழந்தைகள் உட்பட தீக்காயம் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இதில் மூன்று பேருக்கு காயங்கள் அதிகமாக இருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்பட்ட தீ காயங்களினால் நேற்றுமுன்தினம் காலை 9மணி முதல் இரவு 1மணி வரை புறநோயாளிகளாக 11 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.இதில் 3 பேர் குழந்தைகள் ஆவர்.இவர்கள் அனைவருக்குமே 1% முதல் 2% வரை மட்டுமே தீக்காயங்கள் ஏற்பட்டன.மேலும், ஓட்டேரி, அரும்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, கொருக்குபேட்டை பகுதிகளை சேர்ந்த 4 நபர்கள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 12 வயது சிறுவன மற்றும் 4 வயது சிறுமிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 12 வயது சிறுவன் கையில் atom பாம் வெடித்து கையில் காயம் ஏற்பட்டுள்ளது. 4 வயது சிறுமிக்கு புஸ்வானம் வெடித்து கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
உள் நோயாளிகளாக இருப்பவர்கள் அனைவருக்கு அதிகபட்சமாக 7% காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதால் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதேபோன்று சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 10 பேர் தீக்காய சிகிச்சைக்காக வந்தனர். அதில் 9 பேர் லேசான காயம் காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒருவருக்கு 40% க்கும் மேல் தீக்காயம் இருந்ததால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
தீக்காயம் ஏற்பட்டவர்களில் பலருக்கு புஸ்வானம் வெடித்து காயம் ஏற்பட்டதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதேபோன்று லேசான தீக்காயங்களுடன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் சிலர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.