சென்னையில் திருட்டு போன இருசக்கர வாகனத்தை சாமர்த்தியமாக மீட்ட இளைஞர்!

சென்னையில் திருட்டு போன இருசக்கர வாகனத்தை சாமர்த்தியமாக மீட்ட இளைஞர்!

இருசக்கர வாகனங்கள்

சென்னையில் திருட்டு போன தனது இருசக்கர வாகனத்தை போலீசார் உதவியுடன் சாமர்த்தியமாக இளைஞர் ஒருவர் மீட்டுள்ளார்.

 • Share this:
  சென்னையில் திருட்டு போன தனது இருசக்கர வாகனத்தை போலீசார் உதவியுடன் சாமர்த்தியமாக இளைஞர் ஒருவர் மீட்டுள்ளார்.

  சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி, பாலாஜி நகர், 2வது தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (24). இவர், பாடியில் உள்ள பிரபல தனியார் கம்பெனி ஊழியர் ஆவார். இவர், கடந்த 19ம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் வந்துள்ளார். பின்னர், அவர் வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.

  மீண்டும் மறுநாள் காலை அஜித்குமார் தனது பைக்கை எடுக்க வந்தபோது, அங்கிருந்து பைக் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், பைக்கில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் ஆய்வு செய்தார். அப்போது அவரது பைக் செங்குன்றம் அருகே எடப்பாளையம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

  இது குறித்து அஜித்குமார் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர், போலீசார் அஜித்குமார் அழைத்து கொண்டு எடப்பாளையம் சென்றனர். அப்போது, அங்கு ஒரு வீட்டு முன்பு பைக் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் பைக்கை திருடிய இரண்டு வாலிபர்களை பிடித்து கொரட்டூர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

  அதில், அவர்கள் செங்குன்றம், எடப்பாளையம், கடப்பா ரோடு, பங்களாதேஷ் நகர், 1வது தெரு சேர்ந்த அஜய்(22), காஞ்சிபுரம் அருகே அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

  மேலும், இவர்கள் இருவரும் நள்ளிரவில் கொரட்டூர் வந்து பைக்கை திருடி சென்றதை ஒப்புக்கொண்டனர். பின்னர், போலீசார் புகாரின் அடிப்படையில் அஜய், மூர்த்தி ஆகியோரை இன்று காலை கைது செய்தனர். இதன் பிறகு, போலீசார் இருவரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாலையில் சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர் - கண்ணியப்பன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: