சென்னையில் வடிவேலு படத்தை போல 100-வது திருட்டை கொண்டாட வேண்டும் என்று நினைத்த கும்பல் கைது...

Youtube Video

சென்னை அம்பத்தூரில் எப்படியாவது விரைவில் பணக்காரன் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கொள்ளையடிக்க பல முறை முயற்சித்தும் முடியாமல் கடைசியில் போலீசாரிடம் சிக்கியுள்ளது ஒரு கொள்ளை கும்பல்.புது கொள்ளையர்கள் கொத்தாக சிக்கியது எப்படி?

  • Share this:
    சென்னை கொளத்தூர் செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் 54 வயதான கிருஷ்ணன். வில்லிவாக்கம் காய்கறிசந்தையில் கடை நடத்தி வருகின்றார். மேலும் நாற்பதிற்கும் மேற்பட்ட கடைகளை வாடகைக்கு விட்டு வருவாய் பார்துள்ளார். வாடகை பணம், பல வழிகளில் வருமானம் என்று எப்போதும் பணம் அதிகம் கையில்புறலும் நபராக இருந்துள்ளார்.

    இதை நோட்டமிட்ட அந்தபகுதியில் குடிநீர் கேன் வியாபாரம் செய்யும் மைக்கேல் மற்றும் அவரது நண்பர்கள் நவராஜா மற்றம் ஷாம் பிரகாஷ் கிருஷ்ணன் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் கிருஷ்ணன் எங்கு செல்கின்றார் எப்போது வருகின்றார் என்று நோட்டம்விட்டுள்ளது இந்த கும்பல். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி கிருஷ்ணன் அவரது கடையில் பணியில் இருந்த போது ஏழுபேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்கு XUV வகை காரில் வந்துள்ளது.

    வீட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைபடுத்திக்கொண்டிருந்த அவரது மகளையும் மனைவியையும் கத்தி முனையில் மிரட்டிய கும்பல் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றுள்ளது. ஆனால் அதற்குள் கிருஷ்ணனின் மகன் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கும்பல் வீட்டில் இருந்த 50000 பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளது. அதற்குள் கொள்ளையர்களை அடையாளம் கண்ட அப்பகுதி மக்கள் கொள்ளையர்களின் கார்களை தாக்கியுள்ளனர். ஆனால் கொள்ளையர்கள் காரில் தப்பித்தனர்.

    மேலும் படிக்க... Delhi Farmers Protest | வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி...

    இந்ந சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் ராஜமங்கலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கிய போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கினர்.



    போலீசார் விசாரணையில் இந்த கும்பல் இதே போன்று தொழிலதிபர் ஒருவரை கடத்தி கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. இரண்டு சம்பவத்திலும் ஈடுப்பட்டது ஒரே கார் என்பதை உறுதி செய்த போலீசார் சைபர்க்ரைம் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் கண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொள்ளையில் ஈடுப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் சாம்பிரகாஷ், சுனில் மற்றும் விஜயகுமார் ,மதன், விஜய், கமலகண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணன் வீட்டில் அதிக அளவு எப்போதும் பணம் வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததாகவும் அவரது வீட்டில் கொள்ளையடித்து செட்டில் ஆக திட்டம் தீட்டியே கொள்ளையை அரங்கேற்றியதாகவும் சிக்கியவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இந்த கும்பலின் மூளையாக செயல்பட்ட ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Published by:Vaijayanthi S
    First published: