Chennai Power Cut | சென்னையில் இன்று (28-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை...!

Chennai Power Cut | சென்னையில் இன்று (28-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை...!

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் இன்று 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று (28.04.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் பகுதி: நசரத்பேட்டை முழுவதும், செம்பரம்பாக்கம், மேப்பூர், வரதராஜபுரம், மலையம்பாக்கம் பகுதி, அகரமேல்.

    பட்டாபிராம் பகுதி: திருவள்ளுவர் நகர், கக்கன்ஜி நகர், போலீஸ் குடியிருப்பு, காந்தி நகர், பி.ஜி அப்பார்ட்மெண்ட் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    திருமுல்லைவாயில் பகுதி: சிட்கோ மகளிர் தொழிற்பேட்டை, காட்டூர்.

    தாம்பரம் பொழிச்சலூர் பகுதி: திருநகர், பாவனி நகர், பசும்பொன் நகர், சேக்கிழார் தெரு, ராகவேந்திரா நகர் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    Also read... சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்சட் டெபாசிட்களில் சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகள்!

    சோத்துப்பெரும்பேடு பகுதி: செக்கன்சேரி, நெற்குன்றம், அல்லிமேடு, ஒரக்காடு, மேட்டு சூரப்பேடு, பல்லசூரப்பேடு.
    கும்மிடிபூண்டி சிப்காட் பகுதி : கும்மிடிபூண்டி பஜார் முழுவதும், சித்த ராஜா கண்டிகை, சோலையம்பாக்கம், தம்புரெட்டி பாளையம், மாங்காவரம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    கும்மிடிபூண்டி மாதரபாக்கம் பகுதி: சித்தராஜகண்டிகை, மாதரபாக்கம், கொண்டாமநல்லூர், ஆரம்பாக்கம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

    நீலாங்கரை பகுதி: ப்ளூ பீச் ரோடு, சீ வியுவ் அவென்யூ, பெரிய நீலாங்கரை குப்பம், கேசுரினா டிரைவ் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    மாலை 5.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: