Home /News /tamil-nadu /

சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு... தீவிர சோதனைக்கு பின் பயணிகள் அனுமதி

சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு... தீவிர சோதனைக்கு பின் பயணிகள் அனுமதி

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

விமான நிலையம் வரும் வாகனங்களை நுழைவு வாசல் பகுதியிலேயே பாதுகாப்பு படையினா் தடுத்து நிறுத்தி மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனா்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா வருகின்ற 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை சீா்குலைக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதன் ஒருபகுதியாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமான நிலையம் வரும் வாகனங்களை நுழைவு வாசல் பகுதியிலேயே பாதுகாப்பு படையினா் தடுத்து நிறுத்தி மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனா். அதேபோல் வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதித்து வருகின்றனா்.

    Also Read : டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்தவருக்கு மூக்கில் ரத்தம் - மதுப்பிரியர்கள் பீதி!

    விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பயணிகள் கைப்பைகளில் திரவப் பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாா்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப் பின்னரே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனா்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Chennai Airport, News On Instagram

    அடுத்த செய்தி