சென்னையில் இன்று (04-04-2022) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
போரூர் – திருமுடிவாக்கம் பகுதி: குன்றத்தூர் பகுதி, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, சோமங்கலம், பூந்தண்டலம், பெரியார் நகர், குன்றத்தூர் பஜார், வழதலம்பேடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
டைடல் பார்க் – எழில் நகர் பகுதி: துரைப்பாக்கம் கண்ணகி நகர், எழில் நகர் பெருங்குடி பெருந்தலைவர் காமராஜர் நகர் பிரதான சாலை (1,2,3வது குறுக்கு தெரு), ராம்ஸ ராகவி அப்பார்ட்ஸ்மென்ட்ஸ்.
ஆவடி பகுதி: அலமாதி பங்காரம்பேட்டை கிராமம், வீரபுரம் கிராமம், பாரதி நகர், வேல்டெக் ஜங்கஷன் காமராஜர் நகர் ஸ்ரீனிவாசா நகர், கோவர்த்தனகிரி, அரவிந்த நகர், வசந்தம்நகர், சந்திராசிட்டி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி பகுதி: செயின்ட் தாமஸ் மவுன்ட் மரியபுரம் , துலசிங்கபுரம், கலைஞர் நகர் ஆலந்தூர் சிமெண்ட் ரோடு, பிச்சன் தெரு, திருவள்ளுவர் தெரு மூவரசம்பேட்டை யோகேஸ்வரன் தெரு, எம்.ஜி.ஆர் தெரு, மேடவாக்கம் பிரதான சாலை, பாலாஜி நகர் நங்கநல்லூர் விஸ்வநாதபுரம், கல்லூரி சாலை, கோவிந்தசாமி சாலை ராஜ்பவன் ரேஸ் கோர்ஸ் சாலை (பகுதி), நரசிங்கபுரம் (பகுதி), பிள்ளையார் கோவில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம் பகுதி: சிட்லப்பாக்கம் ராமகிருஷ்ணபுரம், வேளச்சேரி பிரதான சாலை, ஆர்த்தி நகர், 100 அடி சாலை, கலைவாணர் பூங்கா, கல்யாண சுந்தரம் தெரு கிழக்கு தாம்பரம் சுதானந்தா பாரதி தெரு, மோத்திலால் நகர், இலட்சுமி நகர், எம்.இ.எஸ் சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
செம்பியம் பகுதி: முத்தமிழ் நகர் ( 1,6 வது மற்றும் 8வது பிளாக்).
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.