• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை அண்ணாசாலையில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து... மீட்டு பணியில் போலீசார் தீவிரம்

சென்னை அண்ணாசாலையில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து... மீட்டு பணியில் போலீசார் தீவிரம்

அண்ணாசாலையில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

அண்ணாசாலையில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

சென்னை அண்ணாசாலையில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளதால் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • Share this:
    சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் சூழந்து இருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும், ஈரப்பதமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

    சென்னையில் மிகவும் பரபரப்பாக இருக்கும் அண்ணாசாலையில் கனமழையின் ஈரப்பதம் காரணமாக 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அண்ணாசாலையின் திருவிக சிக்னலில் போது காரில் நிறுத்தப்பட்டது. அப்போது பின்னால் வந்த கார் ப்ரேக் போட்டும் ஈரப்பதம் காரணமாக முன்னால் இருந்த கார் மீது மோதி உள்ளது. அதை தொடர்ந்து 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் யாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும் வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போலீசார் 20-க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக அண்ணாசாலையில் ஒரு கிலோ மீட்டருக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: