• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்கா - அமைச்சர் தகவல்

சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்கா - அமைச்சர் தகவல்

சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்கா - அமைச்சர் தகவல்

சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்கா - அமைச்சர் தகவல்

கடந்த திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 69 கோடி ரூபாய் செலவில் தொல்காப்பியர் பூங்கா உருவாக்கப்பட்டது.

  • Share this:
சென்னையில் எண்ணூர், முட்டுக்காடு, கோவளம் உள்ளிட்ட 4 இடங்களில் சுமார் ரூ.2 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 4 புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள தொல்காப்பியர் சுற்றுச்சூழல் பூங்காவில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, கடந்த திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 69 கோடி ரூபாய் செலவில் தொல்காப்பியர் பூங்கா உருவாக்கப்பட்டது என்றும், மீதமுள்ள நிதி பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதுமட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளில் இந்த பூங்கா பராமரிப்பு இல்லாது இருப்பதோடு, பொதுமக்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. இந்நிலையில் முதலமைச்சர் உத்தரவின் பெயரில் தொல்காப்பியர் பூங்கா 1 மாத காலத்திற்குள் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும் என்றார். நீதிமன்ற வழக்கு காரணமாக, அதிகமான பொதுமக்களை அனுமதிக்க முடியாவிட்டாலும், குறிப்பிட்ட அளவிலான மக்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

அதேபோல் பக்கிங்ஹம் கால்வாய், எண்ணூர், முட்டுக்காடு, கோவளம் ஆகிய பகுதிகளில் சுமார் ரூ. 2 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 4 புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Also read: ஐ.ஐ.டி - என்ன மர்ம வளாகமா? அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றவரை துரத்தி இருக்கிறது சாதி: சு.வெங்கடேசன் எம்.பி

அதுமட்டுமின்றி சென்னை மாநகராட்சியில் பராமரிப்பு இல்லாத பூங்காக்கள் ஆய்வு செய்யப்பட்டு, மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: