சென்னை காசிமேட்டில் நடந்து சென்ற பெண்ணின் கையை கத்தியால் வெட்டி விட்டு செல்போனை பறித்து சென்ற முகேஷ், கார்த்தி, பரத் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள பிரிண்டிங் அச்சகம் ஒன்றில் பணிபுரியும் கமலி (வயது 24 ) என்பவர் முத்தமிழ் நகர், தண்டையார்பேட்டை பகுதியை சார்ந்தவர். அச்சகத்திற்கு வேலைக்கு சென்று விட்டு காசிமேடு கடற்கரை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இரவு நேரத்தில் கமலியை மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் கமலியின் கையில் கத்தியால் வெட்டி விட்டு அவரது கையிலிருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமலி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் இச்சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதையும் படியுங்கள் | கள்ளச்சாராயம் விற்பனை... ஆத்தூர் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
இந்நிலையில் முகேஷ், கார்த்தி, பரத் ஆகிய மூன்று பேரை கைது செய்து நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News