சென்னையில் இளைஞர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி (வயது 53) இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அந்தப்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் கதவுகளை தாழிட்டு உள்ளே இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண், வீட்டை விட்டு வெளியேறி போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் வீட்டிற்குள் சென்று தேடிப்பார்த்துள்ளனர். அப்போது அந்த இளைஞர் பெட்ரூம் கதவை தாழிட்டு உள்ளே இருந்தது தெரியவந்தது.
போலீஸார் எச்சரித்தும் அந்த நபர் வெளியே வராததால் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த இளைஞர் கை மணிக்கட்டு மற்றும் கழுத்தில் ரத்த காயங்களுடன் கிடந்தார். அவரை மீட்ட போலீஸார் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். பெட்ரூமில் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள் இல்லாததால் வங்கி ஏடிஎம் கார்டை கொண்டு அந்த நபர் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேரியின் வீட்டில் அத்துமீறி நுழைந்து தற்கொலைக்கு முயன்ற நபர் புதுச்சேரியை சேர்ந்ந அரவிந்தன் (வயது 25) என்பது தெரியவந்தது. மேரியின் மகளும் அரவிந்தனும் சென்னையில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர்.
அப்போது அந்தப்பெண்ணுக்கு பண உதவி செய்துள்ளார். சுமார் ரூ.3 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். மேரியும் அவரது மகளும் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
நேற்றும் வழக்கம் போல் பணத்தை கேட்டு வந்துள்ளார். அவர்கள் பணம் தராததால் சண்டைப்போட்டுள்ளார். அதன்பின்னர் வீட்டிற்குள் சென்றுள்ளார். மேரி போலீஸை அழைத்து வருவதை கண்டதும் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.