மூன்று வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சிறை

குழந்தையை கடத்தி சென்ற குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறையும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
சென்னையில் 3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள்  சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெருவைச் சேர்ந்த 50 வயது முதியவர் ரவி,  அதே குடியிருப்பில் வசித்து வந்த தம்பதியின் 3 வயது  குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, குழந்தையை கடத்தி சென்ற குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டு சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் படிக்க: பெயிண்டர் கொலையில் திடீர் திருப்பம் - 17 வயது சிறுவன் அதிர்ச்சி வாக்குமூலம்!


அதேபோன்று, 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, இரு குற்றச்சாட்டுக்கான தண்டனையையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாயை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மிளகாய் பொடி தூவி மாமனாரை வெட்டிக் கொல்ல முயன்ற மருமகன்.. பட்டப்பகலில் பயங்கரம்..!

Published by:Murugesh M
First published: