சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர்... மருத்துவர் உட்பட 2 பேர் கைது..

Youtube Video

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை அரசு மருத்துவமனையில் இருந்து திருடி அதிக விலைக்கு விற்ற மருத்துவர் மற்றும் மருந்தாளுநர் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  கிண்டி பேருந்து நிலையம் அருகே குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரை மறித்து சோதனையிட்ட போது அதில் 12 குப்பிகள் அடங்கிய ரெம்டெசிவிர் மருந்துகள் இருந்தன. காரை ஓட்டி வந்தது கிங்ஸ் மருத்துவமனை கொரோனா வார்டில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தனியார் மருத்துவர் 25 வயதான ராம் சுந்தர் என்பது தெரியவந்தது.

  இந்த நிலையில் அந்த நேரம் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர், அருகில் அதிகாரிகள் நிற்பதைக் கவனிக்காமல், தான் வைத்திருந்த 12 குப்பிகள் அடங்கிய ரெம்டெசிவிர் மருந்தை ராம் சுந்தரிடம் கொடுத்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் கிங்ஸ் மருத்துவமனை மருந்தகத்தில் மருந்தாளுநராகப் பணியாற்றும் 27 வயதான கார்த்திக் என்பது தெரியவந்தது.

  கிங்ஸ் மருத்துவமனைக்கு அரசு கொடுக்கும் ரெம்டெசிவிர் மருந்துகளைத் திருடும் கார்த்திக், அதை மருத்துவர் ராம் சுந்தரிடம் 5000 ரூபாய்க்கு விற்றுள்ளார். மருத்துவர் ராம் சுந்தர் அதைக் கள்ளச் சந்தையில் 20000 ரூபாய்க்கும். மிகவும் அவசரம் என்று கேட்போருக்கு மேலும் அதிக விலைக்கும் விற்றுப் பணம் ஈட்டியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராம்சுந்தர் மற்றும் கார்த்திக் இருவரையும் பிடித்த அதிகாரிகள், கிண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.  ஏற்கனவே சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றதாக 12 பேர் கைதான நிலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகளுக்காக வைக்கப்பட்டிருந்த 8 குப்பிகள் அடங்கிய ரெம்டெசிவிர் மருந்துகளைக் காணவில்லை என மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க... Thoothukudi Sterlite Plant | ஆக்சிஜனை உற்பத்திசெய்ய தயார் நிலையில் உள்ளது ஸ்டெர்லைட் ஆலை: வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு

  இதையடுத்து மருந்துகள் சேமிப்பு கிடங்கு ஊழியர்கள், மருத்துவமனை செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதனடிப்படையிலும் , காலிப்பெட்டிகளில் உள்ள கைரேகை பதிவுகள் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: