ஏ.டி.எம் மையத்தினுள் கிடந்த ரூ.2 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தொலைக்காட்சி செய்தியாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சென்னை கே.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாரி கார்த்திக்கேயன். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று மாலை 7.45 மணியளவில் ஜாபர்கான் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றார்.
அப்போது அந்த மையத்தினுள் ஏ.டி.எம் இயந்திரம் அருகே கேட்பாரற்றுக் 3 ஐநூறு ரூபாய் கட்டுகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அந்த பணத்தை எடுத்து வைத்து, அதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
Also Read : கடைசியில் காய்நகர்த்திய உடன்பிறப்புகள்.. வேதனையில் கூட்டணி கட்சிகள் - சங்கடத்தில் திமுக தலைமை
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த எம்.ஜி.ஆர் நகர் போலீசாரிடம் பாரி கார்த்திக்கேயன் தான் கண்டெடுத்த பணத்தை கொடுத்துள்ளார்.
போலீசார் விசாரணையில், கேட்பாரற்று கிடந்தது ரூ.2 லட்சம் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த பணத்தை கார்த்திக் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனிடையே நேற்று மாலை 6 மணிக்கு வங்கி ஊழியர்கள் ஏ.டி.எம் மையத்தில் பணம் நிரப்பியுள்ளார்கள் என்பதும் தெரியவந்தது.
கண்டெடுக்கப்பட்ட பணம் வங்கி ஊழியர்கள் பணம் நிரப்பும்போது தவறி விட்டு சென்றனரா? அல்லது வேறு யாருடைய பணமா? என சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம்.ல் கேட்பாரற்றுக் கிடந்த பணத்தை மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.