சென்னை செம்மஞ்சேரியில் சர்ச்சையை ஏற்படுத்திய 2 உயிரிழப்புகள்

Youtube Video

சென்னை செம்மஞ்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிகழ்ந்த இரு உயிரிழப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

  • Share this:
    செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசித்து வந்த பிரிசில்லா என்பவர் ஆதரவற்ற நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உயிரிழந்து கிடந்தார். கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இறந்த நிலையில் ஒரு உடல் பல மணி நேரமாக இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து தகவலறிந்த செம்மஞ்சேரி போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு சென்னை பெசன்ட்நகரில் வசித்து வந்த அவரது சகோதரியிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த டென்னிஸ் பயிற்சியாளரான ராஜா என்பவர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக செம்மஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.



    மேலும் படிக்க... Today Tamil Headlines May 10, 2021 | தலைப்புச் செய்திகள் (மே 10,2021)

    அப்போது மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் ராஜா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மருத்துவர் பணியில் இல்லாததாலேயே ராஜா உயிரிழந்ததாக குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள் மருத்துவனையை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய செம்மஞ்சேரி போலீசார் ராஜாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரு உயிரிழப்பு சம்பவங்களால் செம்மஞ்சேரியில் பரபரப்பு நிலவியது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: