அரசு மருத்துவமனைகளின் தேவையை பூர்த்தி செய்ய 12வது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்தது!

ஆக்சிஜன் ரயில்

ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியிலிருந்து 4 கண்டெய்னர்களில்  80 டன் ஆக்சிஜன்  திருவொற்றியூர் கான் கார் நிறுவனத்திற்கு வந்தடைந்தது

  • Share this:
    சென்னை மற்றும் பிற பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையை ஈடுசெய்யும் விதமாக ஒடிசாவில் இருந்து 80 டன் ஆக்சிஜன் இன்று தமிழகம் வந்தடைந்தது.

    கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ ஆக்சிஜனுக்கு ஒருசில இடங்களில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில்  ஆக்சிஜன் பற்றாக்குறையை சீர் செய்ய மாநிலத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை துரிதப்படுத்தியுள்ளதோடு  பிற மாநிலங்களில் இருந்தும் ஆக்சிஜன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை  மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக் குறையை தீர்க்குக் வகையில் வட மாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 11 ரயில்கள் மூலம் 633 டன் ஆக்சிஜன் சென்னை வந்தடைந்துள்ளது.

    இந்நிலையில், ஆக்சிஜன் நிரப்பப்பட்ட கண்டெய்னர் பெட்டிகளுடன் கூடிய  12வது ரயில்  இன்று சென்னை வந்தது.   இதுவரை மேற்கு வங்கம் தாராபூர், ஜார்கண்ட், ஜம்ஷெட்பூர், மகாராஷ்டிரா, ஒடிசா பகுதிகளில் இருந்து கண்டெய்னர் பெட்டிகள் மூலம் ஆக்சிஜன் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இன்று ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியிலிருந்து 4 கண்டெய்னர்களில்  80 டன் ஆக்சிஜன்  திருவொற்றியூர் கான் கார் நிறுவனத்திற்கு வந்தடைந்தது. இங்கிருந்து சாலை மார்க்கமாக லாரிகள் மூலம் ஆக்சிஜன் பற்றாக் குறையாக இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு  இந்த ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுவரை 703 டன் ஆக்சிஜன் ரயில்கள் மூலம் சென்னை வந்து அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இதன் மூலம் சென்னையின் ஆக்சிஜன் பற்றாக்குறை தீரும் என அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: