சென்னையில் 11வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணையில் திடுக் தகவல்!!

சென்னையில் 11வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணையில் திடுக் தகவல்!!

வீட்டில் அண்ணனும், தங்கையும் மட்டும் இருந்துள்ளனர். வீட்டில் ஒரே அறை இருப்பதால் ஜெயந்தி துணி மாற்ற போவதாக கூறி அண்ணனை வெளியே அனுப்பியுள்ளார்.

  • Share this:
    ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை ஆதம்பாக்கம், மோகனபுரி 4வது தெருவை சேர்ந்தவர்கள் ரவிசந்திரன் வெங்கம்மாள் இவர்களுக்கு 16-வயதில் ஒரு மகனும் (11-வயதில்) 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஜெயந்தி என்கிற மகளும் உள்ளனர். ரவிச்சந்திரன் ஆந்திராவில் விவசாயம் செய்து வருகிறார். வெங்கம்மாள் இரண்டு பிள்ளைகளுடன் தனியாக இருந்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5:00மணி அளவில் வெங்கம்மாள் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டார் வீட்டில் அண்ணனும், தங்கையும் மட்டும் இருந்துள்ளனர். வீட்டில் ஒரே அறை இருப்பதால் ஜெயந்தி துணி மாற்ற போவதாக கூறி அண்ணனை வெளியே அனுப்பியுள்ளார்.

    ஜெயந்தி வெகு நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அண்ணன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது ஜெயந்தி மின்விசிறியில் துப்பட்டாவை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    Also read: தின்பண்டம் என நினைத்து கிளீனிங் பவுடர் தின்ற 5 வயது சிறுமி; அடையாளம் தெரியாத வகையில் உடல் மெலிந்த சோகம்!

    விசாரணையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சிறுமி பூப்படைந்ததாகவும், இந்நிலையில் நேற்று வயிற்று வலி அதிகம் இருந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    செய்தியாளர் - சுரேஷ்
    Published by:Esakki Raja
    First published: