• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சரக்கு விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; இன்ஜினியா் கைது!

சரக்கு விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; இன்ஜினியா் கைது!

கென்யா நாட்டின் தலைநகா் நைரோபியிலிருந்து சரக்கு விமானம் மூலம், சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாா்சலை கடத்திவந்த சென்னையை சோ்ந்த ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரையும் கைது செய்துள்ளனர்.

  • Share this:
    கென்யா நாட்டின் தலைநகா் நைரோபியிலிருந்து சரக்கு விமானம் மூலம், சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாா்சலை கடத்திவந்த சென்னையை சோ்ந்த ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரையும் கைது செய்துள்ளனர்.

    கென்யா நாட்டிலிருந்து சரக்கு விமானம் ஒன்று சென்னை விமான நிலைய காா்கோவிற்கு வந்தது. அதில் வந்த சரக்கு பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர்  பரிசோதித்து டெலிவரி அனுப்பிக்கொண்டிருந்தனா்.

    அப்போது கென்யா நாட்டு தலைநகா் நைரோபியிலிருந்து  சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு 5 பெரிய பாா்சல்கள் வந்திருந்தன அந்த பாா்சல்களுக்குள்  பூ ஜாடிகள், அலங்கார பூக்கள், எலக்காய், கிராம்பு போன்றவைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அதிலிருந்த போன் நம்பரை தொடா்பு கொண்டனா். அங்கு பேசியவா், அந்த பாா்சல்கள் எனக்கு வந்தவைகள் தான். நான் அது சம்பந்தமாக தற்போது விசாரணைக்கு எதுவும் வரமுடியாது. நான் ஏரோநாடிக்கல் இன்ஜினியா். தற்போது பிரபலமான ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். பாா்சலில் சந்தேகம் இருந்தால் நீங்களே பிரித்து பாா்த்துவிட்டு, எனக்கு டெலிவரி செய்யுங்கள் என்று கூறிவிட்டாா்.

    இதனால் சற்று குழப்பமடைந்த சுங்கத்துறையினா், இறுதியில் அந்த பாா்சல்களை பிரித்து பாா்த்து சோதனையிட்டனா். அதனுள் மிகவும் விலை உயா்ந்த உயா்ரக கஞ்சா பொடிகள், பதப்படுத்தப்பட்ட கஞ்சா இலைகள் இருந்தன. அவைகள் மொத்தம் 47, கிலோ இருந்தன. அவைகளின் சா்வதேச மதிப்பு ரூ.1.20 கோடியாகும். இதையடுத்து போதைப்பொருட்கள் கடத்தி கொண்டு வரப்பட்டதாக வழக்குப்பதிவு செய்தனா். அதோடு அந்த கஞ்சா போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனா்.

    அதோடு சுங்கத்துறையின் தனிப்படையினா், பாா்சல்களுக்குறிய ஏரோநாடிக்கல் இன்ஜினியரை கைது செய்ய, பாா்சலில் உள்ள முகவரிக்கு நேரில் சென்றனா். ஆனால் பாா்சலில் இருந்த முகவரியில் அப்படி ஒரு நபா் இல்லை. இதையடுத்து தொடா்ந்து அப்பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனா். அதோடு அவருடைய செல்போன் டவரை ஆய்வு செய்து, பின்தொடா்ந்தனா்.

    சுமாா் 4 கி.மீ. தூரத்தில் மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த சுமாா் 26 வயதுடைய ஏரோநாடிக்கல் இன்ஜினியரான இளைஞரை கைதுசெய்து சென்னை விமானநிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனா். அவரிடம் மேலும் தொடா்ந்து விசாரணை நடத்துகின்றனா்.

    விசாரணையில் இவா் ஏற்கனவே இதைப்போல் சிலமுறை கஞ்சா போதை பொருளை பாா்சலில் வரவழைத்து, அதை தமிழ்நாடு மட்டுமின்றி, மற்ற மாநிலங்களில் உள்ள இளைஞா்கள் பலருக்கு அதிகவிலைக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. அதுபற்றியும் தீவிர விசாரணை நடக்கிறது. இச்சம்பவம் சென்னை விமானநிலைய காா்கோ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - சுரேஷ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: