திமுக எம்.பி.க்கள் டி.ஆர் பாலு, தயாநிதி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு

இந்த மனுவை நீதிபதி நிர்மல்குமார் இன்று பிற்பகல், அவசர வழக்காக விசாரிக்கிறார்.

திமுக எம்.பி.க்கள் டி.ஆர் பாலு, தயாநிதி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு
டி.ஆர் பாலு மற்றும் தயாநிதி மாறன்
  • News18
  • Last Updated: May 23, 2020, 1:16 PM IST
  • Share this:
தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

பட்டியலினத்தவர்கள் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசிய, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருப்பதால், ஜாமின் வழங்க அவரது தரப்பு கேட்ட நிலையில், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன் டி. ஆர் பாலு ஆகியோர் திமுவின் " ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் " பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளரை சந்தித்து வழங்கினார்.


அப்போது, தலைமைச் செயலாளர் தங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார் எனவும், தாங்கள் என்ன  தாழ்த்தப்பட்ட ஆட்களா? எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியுள்ளதாக கூறி, கோவை சேர்ந்த சேகர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை வெரைட்டி ஹால் காவல்நிலையத்தில் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில், எவரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த கருத்தை தாங்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ளனர். இந்த மனுவை நீதிபதி நிர்மல்குமார் இன்று பிற்பகல், அவசர வழக்காக விசாரிக்கிறார்.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading