Home /News /tamil-nadu /

சென்னை மெரினா கடற்கரையில் உணவின்றி தவித்த 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவளித்த காவல் துணை ஆணையர்..

சென்னை மெரினா கடற்கரையில் உணவின்றி தவித்த 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவளித்த காவல் துணை ஆணையர்..

உணவின்றி தவித்த நாய்களுக்கு உணவு கொடுத்த காவல் துணை ஆணையர்

உணவின்றி தவித்த நாய்களுக்கு உணவு கொடுத்த காவல் துணை ஆணையர்

சென்னை மெரினா கடற்கரையில் உணவின்றி தவித்த 50க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு, வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி, உணவளித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நிவர் புயலால் ஊரே முடங்கி இருந்த நிலையில் உணவின்றி தவித்த நாய்களுக்குக்கு, தேடித் தேடி உணவளித்துள்ளார் சுப்புலட்சுமி..

மேலும் படிக்கவும் ...
சென்னை மெரினா கடற்கரையில் பொழுதுபோக்குகள்  மட்டும் அல்லாமல் பல்வேறு ஜீவராசிகள் உயிர் வாழக்கூடிய பகுதியாகவும் இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பறவைகள் விலங்கினங்கள் அங்கு வருகின்ற பொதுமக்கள் அளிக்கின்ற உணவுகளை உண்டு உயிர் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருக்கின்றன.  இதனால் பொதுமக்கள் யாரும் அங்கு வராத நிலையில் பசியால் சுமார் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் தவித்து வந்தன.

மேலும் படிக்க...Cyclone Nivar | நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு தானே உணவு தயாரிக்கும் அதிமுக எம்.எல்.ஏ





இந்நிலையில், அப்பகுதி வழியாக ரோந்து சென்ற வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி அங்கு பசியால் சுற்றித் திரிந்த நாய்களுக்கு தேடித்தேடி உணவு அளித்துள்ளார். அதனை அங்கிருந்த சமூக ஆர்வலர் ஒருவர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செயல் தற்பொழுது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் வைரலாகி வருகிறது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cyclone Nivar, Nivar

அடுத்த செய்தி