கடந்த 3 ஆண்டுகளில் இந்த வருடம் இயற்கை மரணங்கள் குறைவு - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கடந்த 3 ஆண்டுகளில் இந்த ஆண்டு இயற்கை மரணங்கள் குறைந்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் இந்த வருடம் இயற்கை மரணங்கள் குறைவு - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
  • Share this:
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு காய்ச்சல், சளி பரிசோதனை செய்வதைப் பார்வையிட்டு, மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை மார்ச் மாதம் முதல் அரசு எடுத்து வருகிறது என்றும் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்யும் முறை தீவிரப்படுத்தப்பட்டு, ஒருவருக்கு நோய் அறிகுறி கண்டறியப்பட்டால் உடனே சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

மேலும், 500கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, தினந்தோறும் காய்ச்சல், சளி ஆகியவை கண்டறியப்படுவதாகவும், இந்த மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 7 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், நேற்று வரை (ஜூன் 30) 3,65,113 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்தத் தனிமைப்படுத்துதல் மூலமாக நோய் தொற்று பரவுதல் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு 1,000 தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று மட்டுமே 35,000க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

அதேபோல் தினந்தோறும் பரிசோதனை செய்யும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகம்தான் இந்திய அளவில் அதிகளவு பரிசோதனைகளைச் செய்கிறது. பொதுமக்களுக்கு மாஸ்க் அளிக்க வேண்டும் என முதல்வர் கூறியிருந்ததன் அடிப்படையில், இலவசமாக மாஸ்க் வழங்கும் பணி 95% நிறைவடைந்துள்ளன.

Also see:

எவ்வளவு பரிசோதனை செய்யப்படுகிறது என்பதிலும் இறப்பு விகிதத்தைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கிறோம். மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடிப்பது சிரமமாக உள்ளது. தண்டையார்பேட்டை பகுதியில் 2995 தெருக்களில் தினமும் 300க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 14 நாட்களில் ஒருவருக்குக் கூட தொற்று ஏற்படவில்லை. அதேபோல் 120க்கும் மேற்பட்ட தெருக்களில் கடந்த ஒரு மாதமாக தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்றினால் தொற்று முழுவதுமாக ஒழிக்க முடியும் என்று கூறினார்.

தற்போது அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறைவாக உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ஆணையர், 100% சுகாதாரமான முறையில் தரமான உணவு வழங்கபடுவதாகத் தெரிவித்தார். மேலும், தொற்று பாதித்த முதியவர்களின் வீடுகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதற்கு, அந்த மண்டலத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால் போதும் எனத் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் இந்த வருடம் இயற்கை இறப்புகள் குறைந்துள்ளதாகக் கூறிய அவர், 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறந்தோர் எண்ணிக்கை 4859, மே மாதம் 5149; 2019ம் ஆண்டு ஏப்ரலில் 4888 மரணங்கள், மே மாதம் 5738. இந்த எண்ணிக்கை இவ்வாண்டு (2020) ஏப்ரல் மாதம் 3754ஆகவும் மே மாதம் 4532 என்ற அளவிலும் உள்ளதாக புள்ளி விவரங்களை அளித்தார்.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading