• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Nivar | Metro Rail | சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று வழக்கம்போல் இயங்கும்..

Nivar | Metro Rail | சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று வழக்கம்போல் இயங்கும்..

மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)

மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)

சென்னையில் மெட்ரோ ரயில்கள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    நிவர் புயல் காரணமாக ரயில், பேருந்து, ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இயங்கி வந்த சிறப்பு புறநகர் ரயில் சேவையும் இன்று இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் அத்தியாவசிய துறைகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பால் விற்பனை, பெட்ரோல் நிலையங்கள் இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, விடுமுறை தின அட்டவணைப்படி மெட்ரோ ரயில் சேவை இன்று இயங்கும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க.. Cyclone Nivar | சென்னையில் 2-வது நாளாக வெளுத்து வாங்கிய மழை (வீடியோ)



    அதேநேரம், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: