Cyclone Nivar | சென்னையில் 2-வது நாளாக வெளுத்து வாங்கிய மழை (வீடியோ)
நிவர் புயல் தாக்கத்தால் சென்னையில் 2-வது நாளாக விடிய விடிய கனமழை பெய்ததால், நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது
- News18 Tamil
- Last Updated: November 25, 2020, 7:14 AM IST
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. எழும்பூர், நுங்கம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் இரவிலும் விட்டு விட்டு மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் முழங்கால் அளவுக்கு தேங்கிய நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்ற நிலையில், ஒருசில வாகனங்கள் பழுதடைந்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர், அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை, கத்திபாரா பாலம் போன்ற முக்கிய இடங்களில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. மழையோடு பலத்த காற்றும் வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்தன.
அண்ணா சாலையில் தாராபூர் டவர் அருகே மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் நீரில் நீந்தியவாறு, ஊர்ந்து சென்றன.
திரு.வி.க சாலையில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் அகற்றும் முயற்சியில், மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். தியாகராய நகர், பாண்டிபஜார் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் மூன்று அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
கனமழையால் கோபாலபுரத்தில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்குள் தண்ணீர் புகுந்தது.
நிவர் புயல் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாலை முதல் கனமழை கொட்டியது. ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அவ்வப்போது மின் தடை ஏற்பட்டது.மேலும் படிக்க...Cyclone Nivar Live : நெருங்கும் நிவர் புயல் - தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 21 அடியை கடந்த நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஷ்வரி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏரியில் நீர் மட்டம் 22 அடியை எட்டியதும், அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடக்கப்பட்ட பிறகே உபரி நீர் திறக்கப்படும் என்றார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அத்திப்பட்டு புதுநகர் குடியிருப்புகளில் சூழ்ந்த மழை நீரை மோட்டர் என்ஜின் மூலம் வெளியேற்றும் பணிகளை ஆட்சியர் பொன்னையா நேரில் பார்வையிட்டார். பழவேற்காடு குப்பம் கிராமத்தில் கடல் அலையின் சீற்றம் காரணமாக மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையோரங்களுக்கு கொண்டு சென்றனர்.
மழை, புயல் செய்திகளுக்கு இணைந்திருங்கள்
அண்ணா சாலையில் தாராபூர் டவர் அருகே மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் நீரில் நீந்தியவாறு, ஊர்ந்து சென்றன.
திரு.வி.க சாலையில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் அகற்றும் முயற்சியில், மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.