புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்ற முதலமைச்சர், புயல் கண்காணிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புயல், மழையால் நான்காயிரத்து 133 இடங்கள் பாதிக்கப்படும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் புதன்கிழமை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக கூறினார். அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் மட்டும் பணிபுரிவார்கள் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மழை பெய்வதை பொறுத்து தான் செம்பரம்பாக்கம் நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீரை திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும், 22 அடியை தாண்டினால் உபரிநீர் திறந்துவிடப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...Cyclone Nivar | புயல் கரை கடந்த பிறகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை மக்கள் வெளியே வரவேண்டாம்.. அமைச்சர் ஆர்.பி உதயகுமார்..
முன்னதாக புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இருமாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என உறுதி அளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM Edappadi Palaniswami, Cyclone Nivar, Narayana samy, Nivar, PM Narendra Modi, Pondicherry