Cyclone Nivar | நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை விமான நிலையம் மூடல்..
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையம் 12 மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- News18 Tamil
- Last Updated: November 25, 2020, 8:08 PM IST
அதிதீவிர புயலாக மாறியுள்ள நிவர் புயலின் வெளிச்சுற்றுவட்ட பகுதி புதுவை- கடலூர் கடற்கரை பகுதியில் கரையை கடக்க தொடங்கி இருக்கிறது. தற்போது 15 கி.மீ வேகத்தில் கரையை கடந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் பயங்கர சப்தத்துடன் கூடிய காற்றும் கனமழையும் பெய்தது. மேலும் சென்னைக்கு அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுமார் 5000 கன அடி உபரி நீர் அடையாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக 50-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலையம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் நெருங்கி வருவதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.