• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Cyclone Nivar | கனமழை வெள்ளத்தால் சென்னையில் 70 சதவீத இடங்களில் மின்சாரம் துண்டிப்பு..

Cyclone Nivar | கனமழை வெள்ளத்தால் சென்னையில் 70 சதவீத இடங்களில் மின்சாரம் துண்டிப்பு..

மழை

மழை

Cyclone Nivar | நிவர் புயல் காரணமாக சென்னையில் 70% இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் முன்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி விடியும் வரை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை கடற்கரையில் மழை மேகங்கள் சூழ்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் புயல் உள்ளது.

    மேலும் படிக்க.. Cyclone Nivar | இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால் பழவந்தாங்கல் சுரங்கப் பாதை மூடப்பட்டது..

    இந்நிலையில் கனமழை வெள்ளத்தால், சென்னையில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையைத் தொடர்ந்து நீர் தேங்கியுள்ளதால் மின்சார வாரியம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தென் சென்னையில் வேளச்சேரி, தில்லை கங்கா நகர், எம்.ஜி.ஆர்., நகர். அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    வட சென்னையில் வண்ணாரப்பேட்டை, கொருக்குப் பேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: