• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Cyclone Nivar | தமிழகத்தில் 69 ரயில்கள் இன்று ரத்து.. சென்னையில் விமானம் மற்றும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்..

Cyclone Nivar | தமிழகத்தில் 69 ரயில்கள் இன்று ரத்து.. சென்னையில் விமானம் மற்றும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்..

விமானங்கள் ரத்து

விமானங்கள் ரத்து

Cyclone Nivar | நிவர் புயலால், தமிழகத்தில் இன்றும் 69 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பேருந்து மற்றும் விமான சேவைகளும் தடைபட்டுள்ளன. மேலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
    நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக 7 மாவட்டங்களில் பேருந்துகளும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் சேவைகளும் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் மேலும் 21 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி வியாழக்கிழமை, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செல்லும் 6 ரயில்களின் சேவை இருமார்க்கமாகவும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சென்னை சென்ட்ரல்- பெங்களூரு இடையேயான 4 ரயில்களின் சேவையும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் 2 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல் சென்னை சென்ட்ரல்- மங்களூரு இடையேயான ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது. காரைக்குடி- சென்னை, மதுரை- சென்னை, திருச்சி- சென்னை இடையேயான ரயில் சேவைகளும் வியாழன் அன்று இருமார்கமும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





    குமரியில் இருந்து டெல்லிக்கு செல்லும் நிஜாமுதீன் ரயில், இருமார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது . முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

    மேலும் படிக்க...Cyclone Nivar | வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயலால் காஞ்சிபுரம் - செங்கல்பட்டில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பின

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விபத்துகளை தடுக்கும் நோக்கில் சென்னை கடற்கரை சாலை, ராஜீவ் காந்தி சாலை, எண்ணூர் சாலைகளிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னையில் இன்று மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: