அண்ணியுடன் கள்ளக்காதல்.. படங்களை அனுப்பி வெறுப்பேற்றிய மனைவி.. தலையில் கல்லைப்போட்டு தமிபியைக் கொன்ற அண்ணன்

சென்னையில் தனது மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்த தம்பியை அண்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

  • News18
  • Last Updated: September 3, 2020, 10:41 PM IST
  • Share this:
சென்னை, மயிலாப்பூர் லாலா தோட்டத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பழனி. இவரது மனைவி மரியா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் பழனிக்கு ஒரு தீ விபத்தில் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பழனியின் தம்பி செந்தில், அண்ணி மரியாவுடன் நெருங்கி பழகத் தொடங்கியுள்ளார்.

இதனை அறிந்த பழனி தனது தம்பி செந்தில்குமாருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனாலும் மரியா- செந்தில்குமார் இடையிலான பழக்கம் தொடர்ந்து வந்துள்ளது.


அதை பார்த்த செந்தில்குமாரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

வசதியாக செந்தில்குமாரும் மரியாவும் தங்கள் உறவை தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் கணவர் தகராறில் ஈடுபடவே, மரியா குழந்தைகளுடன் பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மேலும் செந்திலோடு தான் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை பழனிக்கு அவ்வப்போது அனுப்பி வெறுப்பேற்றி வந்துள்ளார்.சில தினங்களுக்கு முன் மைலாப்பூர் பகுதிக்கு வந்த மரியா செந்திலை சந்திக்க வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தகராறு ஏற்படவே தம்பி செந்தில் பழனியை பிடித்துக்கொள்ள மரியா தனது செருப்பால் கணவரை அடித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் ஆத்திரத்தில் இருந்த பழனி செவ்வாய்க்கிழமை இரவு தனது தம்பி செந்தில் குமாரின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துள்ளார். தகவலறிந்த மைலாப்பூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். கொலை வழக்கு பதிவு செய்து பழனியை கைது செய்தனர்.
First published: September 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading