முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழக உளவுப்பிரிவு ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்: தமிழக அரசு உத்தரவு

தமிழக உளவுப்பிரிவு ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்: தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு தலைமைச் செயலகம்

தமிழக அரசு தலைமைச் செயலகம்

தமிழக உளவுப்பிரிவு ஐ.ஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக காவல்துறையில் மிக சக்தி வாய்ந்த பதவிகளில் ஒன்றான உளவுத்துறையின் ஐஜியாக நீண்ட வருடங்கள் பணியில் இருந்த சத்தியமூர்த்தி சனிக்கிழமையுடன் ஓய்வுபெற்ற நிலையில், தமிழக உளவுப்பிரிவு ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பணியாற்றிய ஈஸ்வரமூர்த்தியை உளவுப்பிரிவு ஐஜியாக நியமித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2004 முதல் 2005ஆம் ஆண்டு வரையிலும், 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் 2019ஆம் ஆண்டு ஜூன் வரையிலும் உளவுப்பிரிவில் பல்வேறு துறைகளில் ஈஸ்வரமூர்த்தி பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இவர் ஏற்கனவே உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜி பதவியை கூடுதலாக கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...

திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியாவிற்கு 100 டன் காய்கறி & பழங்கள் ஏற்றுமதி


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: Tamil Nadu govt