இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Lok Sabha Election 2019 | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கோவை தொகுதியில் பி.ஆர்.நடராஜன் மற்றும் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: March 15, 2019, 7:19 PM IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!
சுப்பராயன் மற்றும் செல்வராஜ்
news18
Updated: March 15, 2019, 7:19 PM IST
திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.


இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கோவை தொகுதியில் பி.ஆர்.நடராஜன் மற்றும் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் தொகுதியில் சுப்பராயனும், நாகை தொகுதியில் செல்வராஜும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also See...

Loading...

First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...