சென்னையில் ஒரே நாளில் 50 பேருக்கு தொற்று ; அதிகம் பாதித்த பகுதிகள் எவை...?

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 65.14% பேரும், பெண்கள் 34.86% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் ஒரே நாளில் 50 பேருக்கு தொற்று ; அதிகம் பாதித்த பகுதிகள் எவை...?
மாதிரிப் படம்
  • Share this:
சென்னையில் இதுவரை மொத்தம் 285 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் தமிழகத்தில் இதுவரை 1477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 285 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த எண்ணிக்கை கடந்த 13 நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் அதிக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் 6 அன்று 110 பேர் பாதித்திருந்த நிலையில், ஏப்ரல் 7 அன்று 39 பாதிப்புகள் அதிகரித்து 149 ஆக உயர்ந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 76 பேர் குணமடைந்து உள்ளனர்.அதிகபட்சமாக ராயபுரத்தில் 91 பேரும், திரு.வி.க நகரில் 38 பேரும், தேனாம்பேட்டையில் 36 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 30 பேரும், கோடம்பாக்கத்தில் 29 பேரும்,  அண்ணாநகரில் 26 பேரும் உள்ளனர்.

மேலும், பெருங்குடி மற்றும் அடையாறில் 7 பேரும், வளசரவாக்கத்தில் 5 பேரும், திருவொற்றியூரில் 5 பேரும், ஆலந்தூரில் 5 பேரும், மாதவரத்தில் 3 பேரும்,  சோழிங்கநல்லூரில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூரில் இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை.

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 65.14% பேரும், பெண்கள் 34.86% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 62 பேருக்கு தொற்று உள்ளது.  குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 2 நபரும், 80 வயதுக்கு மேல் 7 நபரும் பாதித்து உள்ளனர்.10 முதல் 19 வயதுள்ளோர் 21 பேருக்கும், 20 முதல் 29 வயதுள்ளோர் 42 பேருக்கும், 40 முதல் 49 வயதுள்ளோர் 53 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 42 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 29 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 16 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

மண்டலம் : மொத்தம் - உயிரிழந்தவர்கள் - குணமடைந்தவர்கள்___திருவொற்றியூர் - 5 - 0 - 0, மணலி - 0 - 0 - 0, மாதவரம் - 3 - 0 - 3,தண்டையார்பேட்டை - 30 - 1 - 2,ராயபுரம் - 91 - 5 - 16,திருவிக நகர் - 38 - 1 - 11,அம்பத்தூர் - 0 - 0 - 0,அண்ணாநகர் - 26 - 0 - 10, தேனாம்பேட்டை - 36 - 0 - 6, கோடம்பாக்கம் - 29 - 0 - 15, வளசரவாக்கம் - 5 - 0 - 4, ஆலந்தூர் - 5 - 0 - 2, அடையார் - 7 - 0 - 4, பெருங்குடி - 7 - 0 - 2, சோழிங்கநல்லூர் - 2 - 0 - 1
First published: April 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading