Home /News /tamil-nadu /

மேயர் அக்காவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - கவனம் ஈர்க்கும் இளம்வயது கவுன்சிலர் நிலவரசி

மேயர் அக்காவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - கவனம் ஈர்க்கும் இளம்வயது கவுன்சிலர் நிலவரசி

பிரியா ராஜன் - நிலவரசி

பிரியா ராஜன் - நிலவரசி

சென்னை மாநகராட்சியின் இளம்வயது கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலவரசி சென்னை மேயரான பிரியாவை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை மேயருக்கு வாழ்த்து சொன்ன இளம்வயது கவுன்சிலர் ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம். 

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெருவாரியான வெற்றியை குவித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்றங்களில் இளம்வேட்பாளர் களமிறக்கப்பட்டு வெற்றி வாகையும் சூடியுள்ளனர். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை மாநகராட்சி மேயர் பதவி யாருக்கு கிடைக்கும் என்று நினைத்திருந்த வேளையில் 28 வயதான பிரியா ராஜனை சென்னை மேயாராக்கியுள்ளது திமுக தலைமை. அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றாலும் 28 வயதில் மேயர் பதவியை அலங்கரித்துள்ளார் பிரியா.

    Also Read: முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்: இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை?

    அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு இருவருடன் செங்கோல் ஏந்தி மேயர் பிரியா நின்ற புகைப்படம் ட்விட்டரில் நேற்று வைரலானது. பிரியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் இளம்வயது கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலவரசி சென்னை மேயரான பிரியாவை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     



    இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிலவரசி , “சென்னை மாநகராட்சியின் மேயர் அக்கா பிரியா ராஜன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 136-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு  22 வயதான இளம்பெண் நிலவரசி வெற்றி வாகை சூடினார். எம்.பி.ஏ. படித்து வரும் இவர் படித்துக் கொண்டே மக்கள் பணியை சிறப்பாக செய்வதாக தெரிவித்துள்ளார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Chennai corporation, DMK, Mayor

    அடுத்த செய்தி