சென்னையில் அரசு துறைகளின் ஒருங்கிணைப்பு பணி தாமதமாகி மழை நீர் வடிகால் பணிகளை முடிக்காமல் உள்ள இடங்களில் பணிகளை விரைந்து முடிக்க வரும் மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டித்து மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் மாதந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் ஜனவரி 15, 2023 வரை நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த டிசம்பர் 15ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனவரி 15ம் தேதி வரை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சாலையில் வணிக விற்பனையகம் நிகழ்ச்சிகள் அதாவது கமர்ஷியல் ஷாப்பிங் நிகழ்வுகள் மாநகராட்சியின் சாலை பகுதிகளில் நடத்த கட்டணம் நிர்ணயம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் புதிய நாய் இனக்கட்டுபாடு மையம் அமைக்கும் தீர்மானம், கொரோனா, டெங்கு, மலேரியா தடுப்பு பணிகளில் பணிபுரிய ஏதுவாக நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களின் ஒப்பந்த காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் நலமிகு சென்னை மற்றும் நட்புமிகு சென்னை என்ற அடிப்படையில் தனியார் நிகழ்வுகள் நடத்திட அனுமதி வழங்கும் தீர்மானம். சென்னை மாநகராட்சியில், 1 லட்சத்து 77 ஆயிரம் தெரு விளக்கு மின் கம்பங்கள் மற்றும் 200 உயர் கோபுர மின் விளக்குகள் இயக்குவதற்கு, பராமரிக்க ஒரு ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்ய அனுமதி வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க:ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக ஈபிஎஸ் இடம் மத்திய அரசு கருத்துக் கேட்பு
இத்தோடு கொசஸ்தலை ஆற்றில் கட்டமைக்கப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவடையாத காரணத்தினால் அதன் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க அனுமதி வழங்கும் தீர்மானம்.பெருங்குடி குப்பை கிடங்கு பையோ மைமிங் முறையில் சுத்தப்படுதும் போது சுற்றுச்சூழல் பூங்கா,சி என் ஜி பூங்கா ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஏற்ப தயார் படுத்த அனுமதி வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் பருவமழை காரணமாகவும், குடிநீர் குழாய்கள், மின் துறைகளின் மின் கம்பங்கள் மற்றும் மின் பகிர்மான பெட்டிகள், மின்மாற்றிகள் போன்றவை இடமாற்றம் செய்யும் பணி தாமதமானதாலும் மழை நீர் வடிகால் பணிகள் முடிக்க முடியாத சூழ்நிலை உள்ள இடங்களில், 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை கால நீட்டிப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
சென்னையில் டிஜிட்டல் தொழில்நுட்ப தர நிலைகளின் சமீபத்திய போக்குகளுக்கு ஏற்ப ERP 2.0 செயல்படுத்த தீர்மானம் என மொத்தமாக இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மொத்தமாக 80 தீர்மானங்கள் இந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai corporation