முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மகளிர் போலீசாருக்காக நடமாடும் கழிவறை வாகனங்கள்..!

மகளிர் போலீசாருக்காக நடமாடும் கழிவறை வாகனங்கள்..!

பெண் காவலர்கள்

பெண் காவலர்கள்

2 கோடியில் சென்னை மாநகராட்சி வாங்குகிறது.

  • Last Updated :

சென்னை மாநகராட்சி பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் மகளிர் காவலர்களுக்காக நிர்பையா நிதியிலிருந்து 2 கோடி செலவில் நடமாடும் கழிவறை வாகனங்களை வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

2013 ஆண்டு நிர்பயா என்ற திட்டத்தை உருவாக்கி அதில் 2 கோடி நிதியை ஒதுக்கியது. அந்தத் திட்டத்தை பயன்படுத்தி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திட்டங்களை செயல்படுத்த அறிவுறுத்தியது.

இந்நிலையில் அந்த நிதியைப் பயன்படுத்தி சென்னை மாநகரப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பெண் காவலர்களுக்காக 2 கோடியே 70 லட்சம் செலவில் நடமாடும் கழிவறை வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் சுமார் 5 ஆயிரம் பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். சில நேரங்களில் மற்ற மாவட்டங்களிலிருந்தும் வரவழைக்கப்படுகின்றனர். இவர்கள் பொதுக்கூட்டங்கள், திருவிழாக்கள், முக்கியத் தலைவர்களின் வருகை, ஆர்பாட்டம், விழிப்புணர்வு பேரணிகள் போன்றவற்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்போது இயற்கை உபாதைகளைக் கழிக்க போதிய வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர். அதைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சேவை பெண் காவலர்களுக்குப் பேருதவியாக இருக்கும். இதில் மற்ற பெண்களும் அனுமதிக்கப்படுவர் “ என்று கூறினர்.

First published:

Tags: TN Police