ஐஐடி, அண்ணா பல்கலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி... கல்லூரிகளில் காய்ச்சல் முகாம் நடத்த திட்டம்

ஐஐடி, அண்ணா பல்கலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி... கல்லூரிகளில் காய்ச்சல் முகாம் நடத்த திட்டம்

கோப்புப் படம்

சென்னையில் உள்ள கல்லூரிகளில் காய்ச்சல் முகாம் நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • Share this:
  சென்னை ஐஐடி-யில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள் என சுமார் 104 பேருக்கு கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்று பரவியுள்ளது. இதன் காரணமாக விடுதிகள் மற்றும் உணவகங்கள் அங்கு மூடப்பட்டுள்ளன. இதனால், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஐஐடி வளாகத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தொற்று பாதித்த மாணவர்கள் சிகிச்சையில் நலமாக இருப்பதாகவும், மீதமுள்ள மாணவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், ஐஐடி கொரோனா தொற்று நமக்கு ஒரு பாடம் எனவும் தமிழகத்தில் பரவல் குறைகையில், இப்படி குவியலாக தொற்று ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

  இதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக சுமார் 700 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த அண்ணா பல்கலை கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

  மேலும் படிக்க...சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா திடீரென அதிகரிப்பு.. காரணம் என்ன? ஐஐடி இயக்குநர் விளக்கம்

  இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இந்நிலையில் சென்னை ஐஐடியில் மேலும், 79 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: