கொரோனா முகாமில் சிகிச்சையில் இருந்த இளைஞர்களின் டிக்டாக் - மாநகராட்சி வெளியீடு

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த இளைஞர்களின் டிக் டாக் வீடியோக்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர்.

கொரோனா முகாமில் சிகிச்சையில் இருந்த இளைஞர்களின் டிக்டாக் - மாநகராட்சி வெளியீடு
டிக்டாக்
  • Share this:
சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால், அறிகுறி இன்றி கொரோனா தொற்று இருப்பவர்கள் தனிமைப்படுத்தும் முகாம்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

சென்னையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல்வேறு 55 இடங்களில் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டு, 17,500 பேர் தங்கவைக்கப்படும் வகையில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
@mohanram1712##coronavirus ##coronatime


♬ original sound - @n!tha


ஆரம்ப நாட்களில் தனிமைப்படுத்தும் முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை என வீடியோகள் வெளியானது. பின்னர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருக்க நேர்வதால், சிலருக்கும் மன அழுத்தம் உள்ளிட்ட சிக்கல்களும் ஏற்படுகிறது.

Also read... வாக்கிங் சென்ற முதியவருக்கு அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி

இந்நிலையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் சிகிச்சையில் இருந்த இளைஞர்கள் டிக் டாக் வீடியோகளை செய்துள்ளனர். இதை சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ குழுவில் மாநகராட்சி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading