கொரோனா 3-வது அலையை முன்கூட்டியே தடுக்க சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை.. மீறினால் அபராதம் என்றும் எச்சரிக்கை

சென்னை மாநகராட்சி

கொரோனா 3-வது அலையை முன்கூட்டியே தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. முதல் அலையை விட 2-வது அலையில் கிராமம் உட்பட அனைத்து இடங்களிலும் தொற்று தீவரமாக பரவியது. இதனால் கொரோனா தொற்று உட்சபட்சமாக 35 ஆயிரத்தை கடந்து சென்றது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் பல கொரோனா நோயாளிகள் கடும் இன்னல்களை சந்தித்தனர். தினசரி கொரோனா உயிரிழப்பு 450-க்கு மேல் பதிவாகி வந்தது.

  கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தளர்வுகளற்ற ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. மேலும் ஊரடங்கில் வெளியே சுற்றி திரிந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதானல் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவிக்கப்பட்டப்போதும் கொரோனா தொற்று அதிகமுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறிப்பிட்ட சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

  கொரோனா 2-வது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட் நிலையில் தற்போது 3-வது அலை தாக்கம் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக கொரோனா 3-வது அலை  குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்றுள்ளதால் பெற்றோர்கள் மிகவும் கவலையில் உள்ளனர். கொரேனா 3-வது அலைக்கு முன் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

  இந்நிலையில் கொரோனா 3-வது அலையை எதிர்ககொள்ள சென்னை மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னையில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பார்ட்டி ஹால் களில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து சென்னை பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் உரிமையாளர்கள் முன்கூட்டியே பதிவு செய்வது கட்டாயம் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது அபாரதம் விதிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: