கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க ’நண்பன்’ திட்டம் - சென்னை மாநகராட்சி அசத்தல் முயற்சி

கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு   உள்ளவர்களை கண்காணிக்கவும் அவர்களுக்கு உதவிகளை செய்யவும்  ' நண்பன் ' திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தியுள்ளது.

கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க ’நண்பன்’ திட்டம் - சென்னை மாநகராட்சி அசத்தல் முயற்சி
நண்பன் திட்டம்
  • Share this:
சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய நிலையில், இதைக் கட்டுப்படுத்த மைக்ரோ பிளாள், காய்ச்சல் முகாம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்துகிறது. இந்நிலையில் தற்போது வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களுக்காக நண்பன் என்ற திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்த தொடங்கியுள்ளது.

சென்னையில் தினசரி 1,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் வைத்தும் லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு கோவிட் கேர் மையங்களில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளவர்கள் விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றி திரிவதாக மாநகராட்சிக்கு தொடர் புகார்கள் வந்து கொண்டே இருந்தது.


இதனைத் தொடர்ந்து விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டு 100-க்கு மேற்பட்ட நபர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இதைத் தடுக்கவும் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நண்பன் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தியுள்ளது. இதன்படி 5 முதல் 10 தெருக்களுக்கு ஒரு களப்பணியாளர்கள் வீதம் மொத்தம் 3,500 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த களப்பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் விதிகளை முறையாக கடைபிடிக்கிறார்களாக என்பதை ஆய்வு செய்யும் வகையில் தினசரி 3 முறை அந்த வீடுளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். மேலும் தனிமையில் உள்ளவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்கிறார்கள்.

இதன்படி அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், உணவுகள் உள்ளிட்ட அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் நேரடியாக வீட்டிற்கே சென்று அளிக்க உதவி செய்கின்றனர். இதனால்தான் இவர்கள் வீட்டு தனிமையில் உள்ளவர்களின் நண்பன் என்று அழைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தமிழக அரசின் மருத்துவ நிபுணர் குழுவின் தலைவர் பிரதீப் கவுர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading