டெங்கு பாதிப்பு ஏற்படுத்தினால் ₹ 10 லட்சம் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னையில் டெங்கு பாதிப்பு ஏற்படுத்தும் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு 100 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

டெங்கு பாதிப்பு ஏற்படுத்தினால் ₹ 10 லட்சம் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை மாநகராட்சி அலுவலகம். (கோப்புப்படம்)
  • Share this:
சென்னையில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வரும் நிலையில், டெங்கு பாதிப்பு தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. எனவே, மழைக்கால நோய்களான டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை அழிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொசுக்கள் வளர காரணமாக இருக்கும் கட்டிடங்களின் உரிமையாளர்களின் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Also read... புதிய உச்சத்தில் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?


குடியிருப்பு வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கடைகள், ஓட்டல்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு தனித்தனியாக அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இடம் - அபராத தொகை:

குடியிருப்பு வீடுகள் - முதலில் நோட்டீஸ் வழங்கப்படும். பின், 100 முதல் 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.அடுக்குமாடி குடியிருப்புகள் - 500 முதல் 15,000 வரை

குறு, சிறு கடைகள் - 500 முதல் 5000 வரை

பள்ளி, கல்லூரிகள் (1000 மாணவர்களுக்கு கீழ்) - 5000 முதல் 50,000 வரை

பள்ளி, கல்லூரிகள் (1000 மாணவர்களுக்கு மேல்) - 10,000 முதல் 1 லட்சம் வரை

வணிக வளாகங்கள் - 10,000 முதல் 1 லட்சம் வரை

ஓட்டல் (2 நட்சத்திரத்திற்கு கீழ்) - 5000 முதல் 25,000 வரை

ஓட்டல் (2 நட்சத்திரத்திற்கு மேல்), விடுதி, தொழிற்சாலை - 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை

5 ஆயிரம் சதுர அடிக்கு குறைவான கட்டுமான இடங்கள் - 10,000 முதல் 50,000 வரை

5 ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான கட்டுமான இடங்கள் - 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை

மருத்துவமனை (50 படுக்கைகள் கீழ்) - 25,000 முதல் 1 லட்சம் வரை

மருத்துவமனை (50 படுக்கைகள் மேல்) - 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading