Home /News /tamil-nadu /

அவசரத்துக்கு போக இனி அவதிப்பட வேண்டாம்! சென்னை மாநகராட்சி அசத்தல் முயற்சி

அவசரத்துக்கு போக இனி அவதிப்பட வேண்டாம்! சென்னை மாநகராட்சி அசத்தல் முயற்சி

கோப்புப் படம்

கோப்புப் படம்

பொதுமக்கள் கூகுள் மேப்-ல் Toilet என டைப் செய்தால், தங்களின் அருகாமையில் உள்ள பொதுக்கழிப்பிடங்களின் விவரங்கள், இருப்பிடம் மற்றும் முகவரி ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் பொதுக் கழிப்பிடங்களைக் கண்டறியும் வகையில் கூகுள் மேப்பில் பதிவு செய்துள்ளது சென்னை மாநகராட்சி.

    இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 853 இடங்களில் 6,701 இருக்கை வசதிகள் கொண்ட பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    பொதுக்கழிப்பிடம்


    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள பொதுக் கழிப்பிடங்களின் இருப்பிடங்களை அறிந்துகொள்ள ஏதுவாக மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் கூகுள் மேப் ஆகியவை இணைந்து பொதுமக்கள் பயனடையும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து பொதுக்கழிப்பிடங்களையும் கூகுள் மேப்-ல் பதிவு செய்துள்ளது.



    பொதுமக்கள் கூகுள் மேப்-ல் Toilet என டைப் செய்தால், தங்களின் அருகாமையில் உள்ள பொதுக்கழிப்பிடங்களின் விவரங்கள், இருப்பிடம் மற்றும் முகவரி ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும், பொதுமக்கள் பொதுக்கழிப்பிடத்தின் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த தங்களின் மதிப்பீடு மற்றும் கருத்துக்களை தெரிவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chennai, Lok Sabha Key Constituency, Toilet

    அடுத்த செய்தி