கொரோனா குறித்த கணக்கெடுப்புப் பணிக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்... மாநகராட்சி வேண்டுகோள்!

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள் குறித்தும் ஊழியர்கள் கேட்டறிவர்.

கொரோனா குறித்த கணக்கெடுப்புப் பணிக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்... மாநகராட்சி வேண்டுகோள்!
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள் குறித்தும் ஊழியர்கள் கேட்டறிவர்.
  • Share this:
கொரோனா குறித்து அடுத்த 90 நாட்களுக்கு சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கணக்கெடுப்பு பணிக்கு வீடு வீடாக வரும்போது, மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து வீடுகளிலும் கொரோனா குறித்து அடுத்த 90 நாட்களுக்கு 16 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

கடந்த ஞாயிறு தொடங்கிய இந்த பணியில் 75 முதல் 100 வீடுகள் ஒரு பகுதியாக பிரிக்கப்பட்டு வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்படும்.


இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுப்பிரச்னை உள்ளனவா என மாநகராட்சி ஊழியர்கள் கணக்கெடுப்பார்கள். தீவிர அறிகுறிகள் உள்ளோர் சோதனை மற்றும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள் குறித்தும் ஊழியர்கள் கேட்டறிவர். இந்த பணிகளில் ஈடுபடும் பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

Also see...
First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading