கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நாட்களில் பொதுமக்கள் மருத்துவ தேவைகள், அத்தியாவசிய மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வெளியே வர வேண்டும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை சுமார் 7:30 மணி அளவில் திநகர் பாண்டி பஜார் சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்த 66 வயது முதியவரிடம் 100 ரூபாய் அபராதம் வசூலித்து, எச்சரித்து அனுப்பியுள்ளனர் மாநகராட்சி அதிகாரிகள்.
நோய் பரவலை தடுக்கும் முயற்சியில், தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.இப்படி விதி மீறியவர்களிடம் இருந்து இதுவரை 1 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஊரடங்கு காலத்தில் சாலை, பூங்காக்களில் நடைபயிற்சி செல்ல தடை உள்ளது. எனவே, நடைபயிற்சி உள்ளிட்ட விதிமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்து உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.