Chennai Corporation | திடக் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள்...

Youtube Video

சென்னையில் பருவமழைக்கு முன்பு மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் திடக் கழிவுகளை அகற்றும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

  • Share this:
    தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, சென்னை மாநகரில், பருவமழைக்கு முந்தைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் திடக்கழிவுகள், கட்டுமான குப்பைகள், மழைநீர் வடிகால் அடைப்புகளை அகற்றும் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சியும், கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியமும் தொடங்கியுள்ளது.

    கடந்த மாதம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற தீவிர தூய்மை பணிகள் மூலம் மூன்றாயிரத்து 260 மெட்ரிக் டன் குப்பை கழிவுகளும், 10 ஆயிரத்து 85 மெட்ரிக் டன் கட்டட கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளன.



    சென்னையில் மட்டும் நான்காயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிற்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் முகப்பு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு முகப்புக்கும் மற்றொரு முகப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள அடைப்பை சரி செய்ய நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

    மேலும் படிக்க.. Tirunelveli | நெல்லை அரசுப்பள்ளியில் உயரும் மாணவர் சேர்க்கை.. ஆன்லைன் கல்வியில் அசத்தும் ஆசிரியர்கள்..

    மழைநீர் தேங்கும் என ஏற்கனவே கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த பகுதிகளில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பருவமழையின் போது மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.
    Published by:Vaijayanthi S
    First published: